Skip to content | Skip to navigation | Skip to search

Site Navigation
Sign a petition against Microsoft's Office OpenXML becoming an ISO standard

குனு இயங்குதளம் - இது சுதந்திரத்தைப் பற்றியது

குனு திட்டம் என்றால் என்ன?

கட்டற்ற மென்பொருளான குனுவினைக் கொண்டு யுனிக்ஸ் போன்ற முழுமையானதொரு இயங்கு தளமொன்றினை உருவாக்கிட 1984 ல் துவக்கப்பட்டதே குனு திட்டம். லினக்ஸ் கெர்னலைப் பயன்படுத்தக் கூடிய குனு இயங்கு தளத்தின், மாறுபட்ட வடிவங்கள் இன்று பிரபலமாகப் பயன்படுத்தப் பட்டுவருகின்றன. இவை “லினக்ஸ்” என்றே பெரும்பாலும் அழைக்கப் பட்டு வந்தாலும் இவற்றை குனு/ லினக்ஸ் என்றழைப்பதே சாலப் பொருந்தும்.

“குனு யுனிக்ஸல்ல ” என்பதன் பெயர்ச் சுருக்கமே குனு ஆகும். குஹ்-நூ என இது உச்சரிக்கப் படுகிறது.

கட்டற்ற மென்பொருள் என்றால் என்ன?

கட்டற்ற மென்பொருள்” என்பது விலையினை அடிப்படையாகக் கொள்ளாமல் சுதந்திரத்தினை அடிப்படையாகக் கொண்டது. இதனை “இலவசமாகக்” கருதாமல் “சுதந்திரமாக” தாங்கள் கருத வேண்டும்.

இது மென்பொருளை பயன்படுத்தும் ஒருவருக்கு அம் மென்பொருளை இயக்க, படியெடுக்க, விநியோகிக்க, கற்க, மாற்றியமைத்து மேம்படுத்தக் கூடிய உரிமைகளைப் பற்றியது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமாயின் மென்பொருளொன்றைப் பயன்படுத்தும் பயனொருவருக்கு அதன் மீதுள்ள நான்கு வகையான சுதந்திரத்தைப் பற்றியது:

  • எப்பொருட்டும் நிரலினை இயக்கக் கூடிய சுதந்திரம். (சுதந்திரம் 0).
  • நிரல் பணியாற்றும் விதத்தைக் கற்று தமது தேவைக் கேற்றாற் போல் ஆக்கிக் கொள்ளக் கூடிய சுதந்திரம். (சுதந்திரம் 1). முதற்கண் நிரலின் மூலத்தினை அணுகக் கூடிய உரிமம் இதற்கு கொடுக்கப் பட்டிருத்தல் வேண்டும்.
  • பிறரும் பயனுற வேண்டி படியெடுத்து பகிர்ந்துக் கொள்ளக் கூடிய சுதந்திரம். (சுதந்திரம் 2)
  • ஒட்டுமொத்த சமூகமும் பயனுற வேண்டி, நிரலினை மேம்படுத்தி, செய்த மாற்றங்களைப் பொது மக்களுக்கு வெளியிடுவதற்கான சுதந்திரம். முதற்கண் நிரலின் மூலத்தினை அணுகக் கூடிய உரிமம் இதற்கு கொடுக்கப் பட்டிருத்தல் வேண்டும். (சுதந்திரம் 3)

கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை என்றால் என்ன?

குனு திட்டத்திற்கு அமைப்பு ரீதியான ஆதரவு நல்குவது கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை (எப்.எஸ்.எப்) ஆகும். எப்.எஸ்.எப் ற்கு நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகளிடமிருந்து நிதியுதவிச் சிறிய அளவில் கிடைக்கிற பொழுதும் தங்களைப் போன்ற தனிநபர்களின் தொடர்ச்சியான ஆதரவிலேயே இயங்கி வருகின்றது.

எப்.எஸ்.எப் ல் அங்கத்தினர் ஆவதன் மூலமாகவோ, ஆவணங்கள் முதலியவற்றை வாங்குவதன் மூலமாகவோ அல்லது நிதியுதவி அளிப்பதன் மூலமாகவோ இதன் வளர்ச்சிக்குத் தாங்கள் உதவலாம். தங்களின் நிறுவனம் வர்த்தக நோக்கில் கட்டற்ற மென்பொருளினைப் பயன்படுத்தினால், ஸ்தாபன வள்ளலாக ஆவதன் மூலமாகவோ அல்லது குனு மென்பொருளின் டீலக்ஸ் வழங்கல்களை வாங்குவதன் மூலமாகவோ எப்.எஸ்.எப் னைத் தாங்கள் ஆதரிக்கலாம்.

கணினி மென்பொருட்களைப் பயன்படுத்த, கற்க, நகலெடுக்க, மாற்ற மற்றும் மறு விநியோகம் செய்யவும் கட்டற்ற மென்பொருட்களைப் பயன்படுத்தும் பயனர்களின் உரிமங்களை பாதுகாக்கவும் உறுதிக் கொண்டுள்ள எப்.எஸ்.எப் னை குனு திட்டம் ஆதரிக்கின்றது. தனியொரு ஏகாதிபத்தியத்தின் தடையின்றி இணையத்தில் பேச்சு, பத்திரிக்கை மற்றும் அமைப்புகளுக்கானச் சுதந்திரத்தினையும், தனிப்பட்ட தகவல் பரிமாற்றங்களுக்காக தகவல்களை திரித்து பயன்படுத்துவதற்கான உரிமத்தினையும் , மென்பொருள் இயற்றுவதற்கான உரிமத்தினையும் நாம் ஆதரிக்கின்றோம். இது குறித்து மேலுமறிய கட்டற்ற மென்பொருள், கட்டற்ற சமூகம் என்ற புத்தகத்தின் துணையினை நாடவும்.

மேலும் விவரங்களுக்கு


குனு செய்திகள்

The FSF has released the GNU General Public License, version 3 and the Lesser GNU General Public License, version 3!

Massachusetts residents can show their support for free software in government by voting on Governor Patrick's website.

ஏனைய செய்திகள் மற்றும் குனு செய்திகள் பகுதியில் காணக்கிடைக்கும் செய்திகள் குறித்த விவரங்களை அறிய புதியவை பக்கத்தின் துணையினை நாடவும்.

நடவடிக்கை எடுக்க

ஏனைய நடவடிக்கைகள்

GPLv3


இப்பக்கத்தின் மொழிபெயர்ப்புகள்